வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த காற்றழுத்தம் நிலைகொண்டுள்ளது.
இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சாத்தியமுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலையானது மேற்கு முதல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
இதனால் 26ம் திகதி காலையில் மேற்கு- மத்திய வங்காள விரிகுடாவில் தீவிர சூறாவளியாகவும் வலுப்பெறலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த புயல் நிலைமை இலங்கையை நேரடியாக தாக்கும் சாத்தியமும் மிக குறைவாகவே உள்ளது. எனினும் உருவாகும் காற்று இலங்கையின் குறுக்கே வீசுவதால் எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை அதிகரிக்கக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதியில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

