ஈரான் அச்சுறுத்தல்: நெதன்யாகு விடுத்த அறிவுரை!

ஈரானின் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான ஒரே வழி, அதன் அரசாங்கத்தை கவிழ்ப்பதுதான் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”ஈரான் எங்களை அழிக்க நினைத்தது. நாங்கள் அவர்களைத் தடுத்துவிட்டோம். அவர்கள் அணுகுண்டுகளைத் தயாரிக்க விரும்பினர். நாங்கள் அவற்றைத் தடுத்து நிறுத்தினோம். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள்.” என்று கூறினார்.

எனவே, இதை முடிவுக்குக் கொண்டுவர ஒரே ஒரு வழி இருக்கிறது. இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதன் மூலம் ஈரானின் அச்சுறுத்தலை அகற்றலாம் என கூறினார்.

மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கும், மொசாட் மற்றும் நமது அனைத்து பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் நான் பிறப்பித்த உத்தரவு இதுதான் என்று அவர் கூறினார், அந்த உத்தரவு எப்போது அல்லது எப்படி செயல்படுத்தப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *