மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோருகிறார் கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, மேலதிக மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதால், வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்குத் தவறியமை தொடர்பான வழக்கு விசாரணையின் அடிப்படையில், நான்கு மாதங்களுக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது கோரிக்கை தொடர்பான மனு எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *