கீமோ பாலின் வரலாற்றுச் சாதனை!

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் கீமோ பால் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை கீமோ பால் படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற 4 வது ரி20 போட்டியில் கீமோ பால் 41 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம், ஆண்களுக்கான சர்வதேச ரி20 போட்டிகளில் இரண்டாவது முறையாக 5 விக்கெட் வீழ்த்திய அவர், இந்த சாதனையைப் படைத்த முதல் மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஆண்களுக்கான சர்வதேச ரி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ரி20 போட்டியில் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-2 என சமன் செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 வது மற்றும் இறுதி ரி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *