சீனாவில் நடைபெறும் மகளிர் டென்னிஸ் தொடரான Wuhan Open இன்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள இகா ஸ்வியாடெக், ஜெலினா ஒஸ்டாபென்கோ, ஜாஸ்மின் பவோலினி உள்ளிட்ட வீராங்கனைகள் Wuhan Open தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், சீனாவில் நடைபெறும் வுகான் ஓபன் (Wuhan Open) டென்னிஸ் தொடரில், ரஷ்ய வீராங்கனை டயானா ஷ்னைடர், செக் குடியரசின் கரோலினா முசோவாவை 7–5, 6–3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, சீனாவின் குவோ ஹான்யுவை 6–1, 6–4 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இதனால் வுகான் ஓபன் தொடரில் அடுத்த சுற்றுப் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

