‘அஸ்வெசும’ கொடுப்பனவு குறித்து புதிய அறிவிப்பு!

ஒக்டோபர் மாதத்திற்கான ‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவுகள் இன்று (14) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 குடும்பங்களுக்கு 9.12 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,445 குடும்பங்களுக்கு 2.04 பில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *