மதகுருமார்களின் சிறை ஆடை விதிகளை மீளாய்வு செய்ய சஜித் கோரிக்கை!

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள், சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும்போதும் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான விதிமுறைகளை மீளாய்வு செய்வதற்காக பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவை அவசரமாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் ஊடாக துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

சிறையில் உள்ள மதகுருமார்களின் ஆடை தொடர்பான பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்காகவே இந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறும் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிலையான கட்டளை இலக்கம் 550 நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச, சிறைத் தண்டனை அனுபவிக்கும் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதகுருமார்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *