சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் வருடாந்த கூட்டங்கள் பாங்கொக்கில் ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த கூட்டங்கள் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நேற்று ஆரம்பமாகின.

உலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கிய விடயங்களைக் கலந்துரையாடும் இக்கூட்டங்களில் 191 நாடுகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இக்கூட்டங்களில் இலங்கை சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் எதிர்கால பொருளாதார மாற்றத்திற்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படுமென பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கிக் குழுமம், ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் இக்கூட்டங்கள் வாய்ப்பளிக்குமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *