யால தேசிய பூங்காவின் 1, 2ஆம் வலயங்கள் மீண்டும் திறப்பு!

வறட்சி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய வனஜீவராசிகள் பூங்காவின் 1 ஆம் மற்றும் 2 ஆம் மண்டலங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்த இரண்டு பகுதிகளையும் பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளது.

நாட்டில் நிலவிய கடும் வறட்சியால் விலங்குகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டும், வனப் பாதைகளை புனரமைக்கும் நோக்கிலும் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் இந்த மண்டலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

தற்போது மீண்டும் பூங்கா திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் மற்றும் தங்குமிட முகாம்களை முன்பதிவு செய்யும் வசதிகள் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *