பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்!

நேபாளத்தின் மத்தியப் பகுதியிலுள்ள புத்திகண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று பல வீடுகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் அள்ளுண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வெள்ள நிலையைத் தொடர்ந்து இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் காணாமல் போயுள்ளதாக தேசிய அனர்த்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேபாள இராணுவத்தினர், ஒரு வெளிநாட்டவர் உட்பட 49 பேரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். காத்மாண்டுவிலிருந்து சுமார் 100 கிலோ மீற்றர் மேற்கே உள்ள கோர்க்கா மாவட்டத்தின் சும்னுப்ரி கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவு, புத்தி கண்டகி ஆற்றைத் தடுத்ததால், ஆற்றின் கீழ் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *