அதிவேகமாகப் பயணித்ததாகக் கூறப்படும் வேனொன்று, தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், வேனில் பயணித்த குழந்தையொன்று காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

