பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அவுஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி, இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 எனக் கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் ஷோபனா மொஸ்தரி 118 ஓட்டங்களையும், அணித் தலைவி நிகார் சுல்தானா 74 ஓட்டங்களையும் எடுத்தனர். அவுஸ்திரேலிய அணியின் மீகன் ஷட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 28.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.
அவுஸ்திரேலிய அணியின் ஜோர்ஜியா வோல் ஆட்டமிழக்காமல் 131 ஓட்டங்களையும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 70 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தனர். பங்களாதேஷ் அணி சார்பில் ஷோர்னா அக்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

