கற்பிட்டி – இலந்தையடி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 570 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தினர் இணைந்து இன்று (07) காலை மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட 15 பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 570 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் அடங்கிய தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

