இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டார் ஷிராந்தி

ஷிராந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு சற்றுமுன்னர் அழைத்துவரப்பட்டுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கிருலப்பனையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், அங்கு சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

‘சிரிலிய சவிய’ கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *