சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்!

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில்  பல்வேறு விசேட நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது.

அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார்   தலைமையில்  பிரதி அதிபர்களான கலைப்பிறை ஜே.வஹாப்தீன், எம்.ஏ.கமறுந் நிஸா ஆகியோரின் வழி நடாத்தலில்  இடம்பெற்ற இந்நிகழ்வினை, பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பழைய மாணவர்களின் அனுசரனை மற்றும் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில்  உதவி அதிபர்  எம்.பளீலுள்ளாஹ் உட்பட சிரேஷ்ட, கனிஷ்ட ஆசிரியர்களும் மாணவர்களால் வரவேற்பளிக்கப்பட்டனர்.  

இங்கு ஆசிரியர்களின் கலை,கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் நினைவுக் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *