குமார ஜயகொடி ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு இன்று (5) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கோடவெல முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனையடுத்து, வழக்கின் மேலதிக சாட்சியங்களை விசாரிப்பதற்காக விசாரணையை நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *