ரூ.3.65 கோடி தங்க நகைகள் பறிமுதல் – விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக ரூ.3,65,19,192 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற 51 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (03) காலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டி, பல்லேகலை பகுதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகர், டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் EK-650 விமானம் மூலம் காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, 996 கிராம் எடையுடைய தங்க நகைகளை நான்கு பொதிகளாகப் பிரித்து தனது உடலில் மறைத்து வைத்து கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவரும் தங்க நகைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று (04) அதிகாலை 4.45 மணி வரை இடம்பெற்ற சுங்க விசாரணையின் முடிவில், தங்க நகைகள் அரசுடைமையாக்கப்பட்டதுடன், குறித்த வர்த்தகருக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *