கொங்கோவில் எபோலா பாதிப்பு: 8,300 பேர் பாதிப்பு, 4,018 பேர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றது. இதுவரை 7 மாகாணங்களில் 8,300 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 4,018 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் மத்தியில் தொடங்கிய இந்தப் பரவல் தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 2,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

எபோலா உலகின் மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், உட்புற இரத்தக்கசிவு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

கொங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடானுக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *