போலி நுவரெலியா மாவட்ட செயலக கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி நிதி மோசடி

போலி நுவரெலியா மாவட்ட செயலகக் கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி நிதி மோசடி: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

நுவரெலியா: நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகளை (Letterheads) போலியாகப் பயன்படுத்தி, பல்வேறு நபர்களிடம் நிதி மோசடி செய்யும் நாசகார வேலைகள் இடம்பெற்று வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், நலன்புரி உதவிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வைப்பதாகக் கூறி, மாவட்ட செயலாளரின் போலி கையொப்பமிட்ட போலிக் கடிதங்கள் மூலமாக இந்த நிதி சேகரிப்பு மற்றும் மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறான போலி ஆவணங்கள் மற்றும் அழைப்புகளை நம்பி பொதுமக்கள், வணிகர்கள் அல்லது அமைப்புகள் பணத்தை வழங்கி ஏமாற வேண்டாம் என மாவட்ட செயலக அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான கடிதங்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது நுவரெலியா மாவட்ட செயலகத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *