பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி இன்று(03) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் மட்டக்களப்பில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களாகளுக்கான புதுமுகப் பயிற்சி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
10 நாட்களைக் கொண்ட குறித்த பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் பிரணவனின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் கலந்து கொண்டு ஆரம்ப உரையினை நிகழ்த்தியதுடன், இவர்கள் எவ்வாறாக தமது சேவையினை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்திருந்தார்.
மேலும் குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் மதிவண்ணன் வளவாண்மை மேற்கொண்டிருந்ததுடன் குறித்த நிகழ்வில் மாவட்ட தகவல் அதிகாரி ஜீவானந்தனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

