‘குற்றம் புதிது’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் தருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாஸ்டர் பிளான்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர் பிளான்’ படத்தில் தருண் விஜய், சாயாதேவி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ், சம்பத் ராம், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அபி ஆத்விக் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அலிமிர்ஸாக் இசையமைக்கிறார். சர்வைவல் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டி ஜெ இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹரி உத்ரா – பாலகங்காதரன் – திவ்யா ஜெகத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான எஸ். கதிரேசன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்

