எதிரிகளின் பாதிப்பை நீக்குவதற்கான குறிப்பு!

எம்மில் பலரும் தங்களுக்குத் தெரிந்த சூட்சமமான விடயத்தை பாவித்து ஒரு காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி அதனூடாக தங்களுடைய வாழ்வாதாரத்தை பெற்று வருவர்.

இந்த வெற்றி சூத்திரத்தை மற்றவர்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்வதில்லை. இந்நிலையில் உங்களுடைய காரியங்களில் தொடர் தோல்விகளோ அல்லது தடையும், தாமதங்களோ ஏற்பட்டால்… உங்களுக்கு உங்களையும் அறியாமல் மறைமுக எதிரிகள் உருவாகி விட்டார்கள் என கருதலாம். சிலர் தங்களுடைய மறைமுக எதிரி யார் என்பதை துல்லியமாக அவதானிப்பர். 

ஆனால் பலருக்கு இது தொடர்பான அவதானம் எளிதாக கை வரப் பெறுவதில்லை. இந்நிலையில் மறைமுக எதிரிகளால் தொல்லைகளை எதிர் கொள்பவர்களும், வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என கருதுபவர்களும், அவர்களுடைய பாதிப்பிலிருந்து தற்காத்து, மீண்டும் வெற்றி பெறுவதற்கான சூட்சம பரிகாரத்தை எம்முடைய முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.

இதற்கு தேவையான பொருட்கள்: சுத்தமான கரும்புள்ளி ஏதுமற்ற பழுதற்ற ஆறு எலுமிச்சை பழங்கள்.

இந்த ஆறு எலுமிச்சை பழத்தை உங்களுடைய இடது கையில் வைத்துக் கொண்டு உங்கள் தலையை இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அதனை உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள உக்கிர தெய்வங்களான காளி, பிரத்தியங்கிரா தேவி, கருமாரியம்மன் போன்ற உக்கிர தெய்வங்களின் சன்னதியின் முன் அமையப்பெற்றிருக்கும் திரிசூலத்தில் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரியாக திகழும் நபரின் பெயரை உச்சரித்து அவர் எம்முடைய வழியில் குறுக்கிடக்கூடாது என்பதை மனதில் தியானித்து ஆறு பழங்களையும் தொடர்ச்சியாக திரிசூலத்தின் முனைப்பகுதியில் அழுத்தி வைத்திட வேண்டும். பெயர் தெரியாதவர்கள் மறைமுக எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என தியானித்து, அதனை திரிசூலத்தின் முனைப்பகுதியில் அழுத்தி வைத்து விட வேண்டும்.

இதனை தொடர்ந்து ஐந்து முறை உங்கள் விருப்பத்திற்குரிய நாளில் மேற்கொண்டால் உங்களுக்கு தொல்லை கொடுத்த மறைமுக எதிரி மறைந்து விடுவர். ஆனால் இதை நீங்கள் தவறாக பாவித்தால்.. நீங்கள் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *