கத்தாரில் ட்ரோன் பயன்படுத்த தடை!

கத்தார் நாடு முழுவதும் அனைத்து வகையான ட்ரோன்களையும் பயன்படுத்துவதற்கு, உள்துறை அமைச்சகம் மறு உத்தரவு வரும் வரை முழுமையான தடை விதித்துள்ளது.
எந்தவொரு வகை அல்லது அளவிலான ட்ரோன்களையும் இயக்குதல் / பறக்கவிடுதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கீழ்க்கண்ட அனைவருக்கும் பொருந்தும்:
கத்தார் குடிமக்கள்
அங்கு வசிக்கும் வெளிநாட்டினர்
சுற்றுலாப் பயணிகள்
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்
உத்தரவை மீறி ட்ரோன் இயக்குபவர்கள் அல்லது அதற்கு உதவி செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *