இன்றைய சூழலில் எம்மில் பலரும் மாத சம்பளத்திற்காக பணியாற்றினாலும் தங்களுடைய வாழ்வியல் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட விடயங்களை பகுதிநேர தொழிலாக மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொழில் தொடங்கினால் .. அதில் வெற்றி பெற முடியுமா..! என்ற சந்தேகம் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருக்கிறது.
அதே தருணத்தில் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் புதிய புதிய உத்திகளை கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினாலும் லாபமும், அங்கீகாரமும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லையே..! என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள்.
புதிதாக தொழில் தொடங்கினால் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் பலர் பல வகையினதான தேடலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் தொழிலில் வெற்றி பெறுவதற்கான சூட்சம குறிப்பை பிரத்யேகமாக வழங்கியுள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : குங்குமப்பூ
வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றி பெறுவதற்கு சூரிய பகவானின் ஆற்றல் அவசியம் என்பதால்… சூரிய பகவானின் நிகரற்ற ஆற்றலை தன்னகத்தே கொண்டிருக்கும் குங்குமப்பூவை அதற்கே உரிய பிரத்யேக முறையில் பாவிக்க தொடங்கினால் ..வெற்றியை நோக்கிய முதல் அடியை எடுத்து வைக்கலாம்.
குங்குமப் பூவை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனை பால் அல்லது நீரில் கலந்து ஐந்து நிமிடம் வரை காத்திருக்க வேண்டும். இத்தகைய தருணத்தில் குங்குமப் பூவின் ஆற்றல் நீரில் இரண்டற கலந்து விடும். அதன் பிறகு அந்த நீரை நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன் அருந்தி விட்டு பிறகு சென்றால்… உங்களுடைய வெற்றியை நீங்கள் காணலாம். இதற்கு சாத்தியமில்லை அல்லது நடைமுறையில் அசௌகரியம் உள்ளது என எண்ணுபவர்கள் சிறிதளவு குங்குமப்பூவை எப்போதும் தங்கள் உடன் வைத்திருந்தாலும் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

