அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து, சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் ஷியா பிரிவு முஸ்லிம்களும், அலி காமேனியின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயது வந்தோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் அமெரிக்க தூதரகத்தை நோக்கி குரல்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.


