மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளி வாயில்களில் கடமையாற்றும் கண்ணியமிக்க உலமாக்கள், முஅத்தின்கள், ஊழியர்களுக்கான “ஹிரா பவுண்டேஷனின்” அனுசரணையுடன் ரமழான் கால பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று(28) கல்குடா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தலைமையில் ஓட்டமாவடி ஹூதா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹிஸ்புல்லாஹ் “ஹிரா பவுண்டேஷன்” பணிப்பாளர் மௌலவி மும்தாஸ் மதனி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் மௌலவி ஹாமித் சிறாஜி, வாழைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்களான இம்தியாஸ், கபூர், சித்தீக், அனஸ், ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் றிஸ்வி, கோறளைபற்று மேற்கு வட்டார அமைப்பாளர்களான முஸ்தபா மௌலவி, அஸனார், அன்வர், ஆசிரியர், லத்தீப் மற்றும் றபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஓட்டமாவடி ஹூதா ஜும்மா பள்ளிவாயிலின் நிர்வாகத்தினருக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான சினேக பூர்வ சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது.

