சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாணத்தில் உதவிகள் வழங்கிவைப்பு!

 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கிழக்கு மாகாணம் திருகோணமலை  ஈச்சிலம்பற்று பிரதேச செயலக பிரிவின் வெருகல் பிரதேசத்தில் அமைந்துள்ள  அறநெறிப் பாடசாலைகளான,கறுக்காமுனை அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 48 மாணவர்களுக்கும், புன்னையடி அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த – 27 மாணவர்களுக்கும்  85,000 ரூபா பெறுமதியான சீருடைத் துணிகள் 2ம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குண்டுமடு அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 102 மாணவர்களுக்க 42,000 ரூபா பெறுமதியான சீருடைத் துணிகள் வழங்கிவைக்கப்பட்டன.இதேவேளை அம்பாறை  திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள,தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு கிராமங்களைச் சேர்ந்த,தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் – 07, சாதாரண தரம் மற்றும் தரம் – 10, இல் கல்விகற்கின்ற 05 மாணவர்களுக்கும், திருக்கோவில் மெதடிஸ் மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் – 07 இல் கல்வி கற்கின்ற மாணவிக்கும்,துவிச்சக்கர வண்டிகள் தங்கவேலாயுதபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் வைத்து  வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த 3 இலட்சம் பெறுமதியான உதவிகளைசந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.