மட்டக்களப்பு மட்டு ஊடக அமைத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஊரணி அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று (28)பி.ப 3, மணியளவில் நில ஆக்கிரமிப்பை எவ்வாறு எதிர்கொள்வது தடுத்து நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மேனாள் மாநகர முதல்வர்,திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த பொது அமைப்பு பிரதிநிதிகள்,புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பூரணமான ஆவணம் தயாரிக்க வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டதுடன் நில அபகரிப்பு தொடர்பாக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பலரும் ஆலோசனை கூறினர்.


