வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் இளைஞன் கைது!

சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் நேற்று (28) இரவு விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (28)  இரவு 07.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-652 மூலம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரது பயணப் பையை சோதனையிட்ட போது  36,000 வெளிநாட்டுத் தயாரிப்பு “மான்செஸ்டர்” சிகரெட்டுகள் அடங்கிய 180 அட்டைப்பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் புதன்கிழமை (04) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *