‘ரணபாலி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

வட இந்தியாவில் உள்ள உதய்பூர் கோட்டை – அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா இணைந்து நடித்து வரும் ‘ரணபாலி ‘எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஏதய்யா சாமி’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகி வரும்’ ரணபாலி ‘ எனும் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தானா, அர்னால்ட் வொஸ்லு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

நீரவ் ஷா மற்றும் ஜிஷ்ணு பட்டாச்சார்ஜி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அஜய் – அதுல் ஆகிய இருவர் இணைந்து இசையமைக்கிறார்கள். சரித்திர காலகட்டத்திய படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளின் பான் இந்திய படைப்பாக வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஏதய்யா சாமி நீ என்ன மாயம் செய்தாயோ..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் பின்னணி பாடகர் கார்த்திக் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலின் இசை -மெட்டு -காட்சி மொழி -திரை மொழி – அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருப்பதுடன் நட்சத்திர தம்பதிகள் ரசிகர்களுக்கான பரிசாக வழங்கி இருப்பதால்.. அனைவரும் இந்த பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *