மட்டக்களப்பில் அரங்கேறிய ‘மௌன மொழி‘!

இலங்கைத் தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘மௌன மொழி‘ திரைப்படம், நேற்று 28 மாலை மட்டக்களப்பில் தனது முதல் திரையிடலை வெற்றிகரமாக நடார்த்தியது.
மட்டக்களப்பு கல்லடி சுகந்தி திரையரங்கில் இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான காட்சியைக் காண்பதற்குத் திரையுலக ஆர்வலர்களும், ரசிகர்களும் வருகைதந்து இருந்தனர்.
இலங்கை கலைப் படைப்புகளுக்கு எப்போதும் மதிப்பளிக்கும் மட்டக்களப்பு மண்ணில், இந்தப் படத்திற்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இத்திரைப்படம், இன்று மட்டக்களப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
உள்ளூர் கலைஞர்களின் முயற்சியில் உருவான இத்திரைப்படத்தை, மட்டக்களப்பு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் மட்டக்களப்பு மண்ணில் தங்களது படைப்பைச் சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ள படக்குழுவினர், ரசிகர்களின் பேராதரவிற்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *