விசேட தேவை உடையோரை அங்கீகரிக்கும் திட்டம்!

கடந்த கால ஆட்சியாளர்கள் விசேட தேவை உடையோரை அங்கீகரிக்கும் எவ்வாறான திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. எமது அரசாங்கம் தான் முதலில் அதனை நடைமுறைப்படுத்தி அவர்களுக்கான அதிக கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தற்போதுள்ள பத்தாவது பாராளுமன்றத்தில் தான் முதல் முதலாக தேசியப் பட்டியல் மூலம் விசேட தேவையுடையோருக்குரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பாராளுமன்ற உயரிய சபையில் அவர்களது குரல்களை எழுப்பி தங்களது பிரச்சினைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இதற்காக விசேட தெரிவுக் குழு ஒன்றும் முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த பாராளுமன்றத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தான் இவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது

30 வருடம் பழமை வாய்ந்த சட்டத்தின் ஊடாகவே இவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனையும் திருத்தி அமைக்க வேண்டிய தேவை உள்ளது.

எமது அரசாங்கத்தில் தான் இவர்களுக்கான நலன்புரித் திட்டங்களுக்கு அதிக நிதிகள் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களை விட நாம் இவர்களுக்காக அதிக நிதிகளை ஒதுக்கி வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது விபத்துக்கள் அதிகரித்து வருவதனால் அதிகமான அங்கவீனர்கள் உருவாகி வருகின்றார்கள். எமது அரசாங்கத்தில் இவர்களுக்கான அங்கீகாரம் கொடுப்பனவுகள் அதிகம் வழங்கப்பட்டு அவர்களை நிச்சயம் பாதுகாக்கின்ற ஒரு அரசாங்கமாக நாம் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *