T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கையின் இறுதி போட்டி!

டி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில், இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (28) இரவு 7.00 மணிக்கு பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இது ஒரு ஆறுதல் வெற்றியாக அமைந்தாலும், இப்போட்டியின் முடிவே பாகிஸ்தான் அல்லது நியூசிலாந்து அணிகளின் இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும்.
அதன்படி, நியூசிலாந்தை முந்தி பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமாயின், அவர்கள் இன்று முதலில் துடுப்பெடுத்தாடினால் இலங்கைக்கு எதிராக குறைந்தது 64 ஓட்டங்களினால் வெற்றி பெற வேண்டும்.
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *