அம்பாறை மாவட்ட கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தலைவர் தெரிவு!

அம்பாறை மாவட்ட கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தலைவராக ஆசிரியர் ஆரிப் மீண்டும் ஏகமனதாகத் தெரிவாகியுள்ளார்.

அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் அம்பாறை “செனோன்றா” உணவகத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 26 நடுவர்களைக் கொண்ட அமைப்பின் தலைவராக ஆசிரியர் ஆரிப் மீண்டும் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாணத்திலும் தேசிய ரீதியிலும் பல கிரிக்கெட் போட்டிகளுக்கு தற்போது நடுவர் பணியினைச் செய்துவரும் ஆசிரியர் ஆரிப், கடந்த காலங்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல பதக்கங்களைப் பெற்றுக்கொண்டவர்.
நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் உயர் கல்வியைக் கற்று, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வியாபார மாணிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
சம்மாந்துறை சிலியட் தேசிய நிறுவகத்தில் உயர் கணக்கியல் டிப்ளோமைப் பூர்த்தி செய்த இவர், தற்போது  நிந்தவூர் அல்-மதீனா பாடசாலையின் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.
அதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைப்புச் செயலாளராகவும் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது குறித்த சங்கத்தின் நடப்பாண்டின் பிரதித்தலைவர்களாக டமித் நாலக மற்றும் அஸ்வத் ஆகியோரும்
செயலாளராக சமன், பொருளாளராக இந்துநில் நந்திகவும் போட்டி செயலாளராக ருவன் பண்டாரவும் தெரிவு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *