மட்டக்களப்பில் 4 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் கசிப்பு வியாபாரிகள் கைது!

வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, கல்குடா பொலிஸ் நிலையப் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேரை 405 லீற்றர் கசிப்புடன் நேற்று(27) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களையடுத்து வவுணதீவு பொலிஸார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை 365 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர். அதேவேளை வாழைச்சேனை பொலிஸார் 5 லீற்றர் கசிப்புடன் இருவரை கைது செய்தனர்.

அவ்வாறே காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை 30 லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன் கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 5 லீற்றர் கசிப்புடன் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *