எரிவாயு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மார்ச் மாதத்துக்கு 38,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் ஓடர் செய்துள்ளதாக அதன் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனம் ஒரு நாளைக்கு 1,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

இதுவரை, நிறுவனம் ஒரு நாளைக்கு 1,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை சந்தைக்கு விநியோகித்து வந்தது.

இந்நிலையில், தற்போது எரிவாயுவை விநியோகிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக, லிட்ரோவால் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவின் அளவு 1,700 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *