பெரியகல்லாறில் “பட்டத் திருவிழா 2026” 

 

பெரியகல்லாறு சூரியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் “பட்டத் திருவிழா 2026” எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி நண்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது. “வானத்தை பட்டங்களால் அலங்கரிப்போம்” எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பரந்துபட்ட பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

பட்டப் போட்டியில் பங்கேற்போருக்காக முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்காக 10 சிறப்பு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இன் நிகழ்வு கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் 0754725600 அல்லது 0757700773 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *