ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுகங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன.
ஆரணி படைப்பகத்தின் தயாரிப்பில், இயக்குநர் சசிகரன் யோவின் செதுக்கலில் உருவாகியுள்ள இத்திரைப்படம், முற்றிலும் ஈழத்துக் கலைஞர்களின் உழைப்பில் விளைந்த ஒரு படைப்பாகும்.
எதிர்வரும் மார்ச் மாதம் திரைக்கு வரத் தயாராகியுள்ள நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழுவினர் வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான “திலக்” குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இக்கதாபாத்திரத்தில் கலைஞர் “சுவிஸ் ரகு” (Swiss Ragu) நடித்துள்ளதை படக்குழுவினர் போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். கையில் தொலைபேசியுடன் ஏதோ ஒரு பதற்றமான சூழலில் அவர் இருக்கும் போஸ்டர், படத்தின் விறுவிறுப்புக்குக் கூடுதல் வலு சேர்த்துள்ளது.
“திலக்” ஆக சுவிஸ் ரகுவின் வருகை படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
மண்ணின் வாசனை மாறாத படைப்பு
ஈழத்து வாழ்வியலையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் களம் கொண்ட ‘பொம்மலாட்டம்’, சமூக வலைதளங்களில் தற்போதே பேசுபொருளாக மாறியுள்ளது.
தரமான தயாரிப்பு மற்றும் நேர்த்தியான நடிப்புடன் இப்படம் ஒரு காத்திரமான படைப்பாக அமையும் என சினிமா விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
அடுத்தடுத்த அறிவிப்புகளால் சூடுபிடித்துள்ள ‘பொம்மலாட்டம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

