‘ஏமாளிகள் கோமாளிகள்’ நகைச்சுவை தொடர் விரைவில் வெளியீடு!

இணையதளத் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வரும் Kesh Film Factory தயாரிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஏமாளிகள் கோமாளிகள்’ தொடரின் 5-ம் பாகம் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே வெளியான நான்கு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது 5-ம் பாகத்தின் ‘செகண்ட் லுக்’ வெளியிடப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சதீஸ்குமார் லக்ஷ்மன், ஷாமிலா நிசார் மற்றும் ஜமால்தீன் முஷாமில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களின் எதார்த்தமான நடிப்பும், டைமிங் காமெடியும் இந்த பாகத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரின் கதை மற்றும் வசனங்களை ஷாமிலா நிசார் எழுதியுள்ளார்.
கேசவன் திருவைமோலி இப்படத்தை இயக்கியுள்ளதுடன், திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு எனப் பல பொறுப்புகளை ஏற்று திறம்பட முடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த பாகத்தின் டீசர், ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆவலைத் தூண்டியுள்ளது.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், வரும் சனிக்கிழமை அன்று ரசிகர்களின் திரைக்கு வரவுள்ளது.
நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு பக்காவான என்டர்டெய்னராக ‘ஏமாளிகள் கோமாளிகள் – பாகம்-05’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *