“சுத்தி அடி” ஆல்பம் பாடலின் டீசர் வெளியீடு!

ake Me Production தயாரிப்பில், காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள “சுத்தி அடி”எனும் புதிய ஆல்பம் பாடலின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
விறுவிறுப்பான காட்சிகளோடும், துள்ளலான இசையோடும் வெளியாகியுள்ள இந்த டீசர் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த அழகான படைப்பை கிரிஷ் இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு கதாநாயகனாகத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜெகதீஸ் அருணா – மனதை மயக்கும் மெல்லிசை உடனும் எம்.சி ஷான்- வரிகளால் காதல் மழையை பொழிந்துள்ளார்.
BV10 – காந்தக் குரலில் பாடலைப் பாடியுள்ளார். கபில் ஷாம்- துடிப்பான நடன அசைவுகள் மூலமும் சசிகரன் யோ – காட்சி விருந்து படைத்துள்ளார். மேலும் கலை: தினு
சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த “சுத்தி அடி” பாடல், இளசுகளின் ஃபேவரிட் லிஸ்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்தரமான மேக்கிங் மற்றும் சிறப்பான பின்னணி இசையுடன், ஒரு கமர்ஷியல் படத்திற்கு நிகரான தரத்தில் இந்த மியூசிக் வீடியோவை உருவாக்கியுள்ளது Take Me Production குழு என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *