சிலாபம் பகுதியில் தனது பெற்றோருடன் அடிக்கடி முரண்பட்டு வந்த 14 வயது சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்போது, அவர் ஏற்கனவே 2 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உறவினர் ஒருவர் தனது வீட்டில் வைத்து முதன்முதலில் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சிறுமி மாரவில பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி, தனது காதலனுடன் ஒரே நாளில் இரண்டு முறை உடலுறவில் ஈடுபட்டதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளார், தலைமறைவாக உள்ள காதலனைக் கைது செய்ய சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது தனது தாயின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிறுமி தொடர்பில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

