யுக்தா புரொடக்ஷன் வழங்கும் ‘பகடை ஆட்டம்’ புகைப்படத் தொகுப்பு!

யுக்தா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பகடை ஆட்டம்’ வெப் தொடரில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாணம் Valampuri Hotel இல் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்தத் தொடரின் உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவையும் பாராட்டும் விதமாக இந்த விழா அமைந்திருந்தது.
நிகழ்வின் போது படக்குழுவினர் அனைவரும் கௌரவிக்கப்பட்டதோடு, தொடரின் உருவாக்கம் குறித்த சுவாரசியமான தகவல்களும் பகிரப்பட்டன.
நவீன தொழில்நுட்பத் தரத்துடன், விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டுள்ள இந்தத் தொடர், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரைச் செதுக்கிய முக்கிய கலைஞர்கள்:
இயக்கம்: பிரகாஸ் ராஜா
இசை: பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை
ஒளிப்பதிவு: எஸ் எஸ் பிரியன்
தயாரிப்பு: கஜன் கந்தசாமி (யுக்தா புரொடக்ஷன்)
கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களின் வருகையால் விழா மேடை களைகட்டியது. தொடரின் வெற்றிக்கான வாழ்த்துகளுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
“கலைஞர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் இத்தகைய முயற்சிகள், ஈழத்துக் கலைத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.”
என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *