பாதாள உலக குழுவின் உயிர் அச்சுறுத்தலால் பலருக்கு பொலிஸ் பாதுகாப்பு!

பாதாள உலகக்குழுக்களினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள 16 பேருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கந்தர பொலிஸ் பரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள 16 பேருக்கே பொலிஸ்  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புலனாய்வு தகவலின் ஊடாக உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த 16 பேரின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு கையேடு வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள், ஜீப் மற்றும் முச்சக்கர வண்டியின் ஊடாக குறித்த  பகுதிகளில் பொலிஸார் நடமாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனிடையே, உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட்ட சிலரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *