ஆடைகளில் தீப்பற்றினால் இது தான் காரணமா!

இன்றைய சூழலில் எம்முடைய பெண்களும், பெண்மணிகளும் அறிமுகமான நபர்களின் அழைப்பின் பெயரில் சுப நிகழ்வுகளுக்கும் , ஆலயங்களில் நடைபெறும் விழாகளுக்கும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றுகிறார்கள்.

இத்தகைய தருணங்களில் எதிர்பாராவிதமாக அவர்களுடைய ஆடையில் தீப்பொறி பட்டு உடை சேதமடைந்தால்… அது தோஷம் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டு, அதற்கான பரிகாரத்தையும் முன்மொழிகிறார்கள்.

பொதுவாக நாம் அணிந்திருக்கும் வஸ்திரம் எதிர்பாராத தருணத்தில் கிழிந்து விட்டால்… அதனை மீண்டும் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன் இத்தகைய அறிகுறி …. விரைவில் ஒற்றுமை இன்மையால் பாரிய பாதிப்பு ஏற்பட போகிறது என்பதனை உணர்த்துகிறது.

அதனால் ஆடைகளில் தீப்பொறி பட்டு சேதம் அடைந்தாலும்… எதிர்பாராவிதமாக கிழிந்தாலும்… உடனடியாக அருகில் இருக்கும் விநாயகரின் ஆலயத்திற்கு சென்று அவருக்கு அருகம்புல் சாற்றி வழிபட வேண்டும்.

ஆச்சார அனுஷ்டானங்களை நாளாந்தம் கடைபிடிக்கும் சிவாச்சாரியார்களாக  இருந்தால்.. அவர்கள் அகோர அஸ்திர மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *