காத்தான்குடி புதிய அடையாளம் ஒன்றை நோக்கி நகர்கிறது-ஹிஸ்புல்லாஹ்!

இலங்கையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி நகரமானது இதுவரை ஒரு ஆன்மீக நகரமாகவும், வணிகம் சார்ந்த நகரமாகவும் அறியப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, அந்த காத்தான்குடி புதிய அடையாளம் ஒன்றை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரமாக மாறிவருகிறது.

 

காத்தான்குடியானது  இஸ்லாமிய பண்பாடு, கல்வி, வணிகம், ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் சங்கமமாக காணப்படுகிறது. அழகிய பள்ளிவாசல்கள், பாரம்பரிய உணவுகள், விருந்தோம்பல் மனப்பான்மை, அழகிய கடற்கரை போன்றவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை காத்தான்குடிக்குத் தானாகவே இழுத்து வருகின்றன.

 

ஏற்கனவே பல சுற்றுலாப்பயணிகள் காத்தான்குடியை ஒரு Cultural & Religious Tourism Destination ஆகக் கருதி வருகை தரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இஸ்லாமிய கலாச்சாரத்தை அறிய விரும்பும் வெளிநாட்டு பயணிகள், காத்தான்குடியை தங்கள் பயணப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது இன்று அதிகரித்து வருகிறது.

 

இந்த மாற்றத்தின் பின்னணியில் ஹிஸ்புல்லாஹ்வின் தொலைநோக்குப் பார்வையும் மெகா திட்டங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. சுற்றுலாத்துறையை முன்னேற்றும் நோக்கில், நகர அபிவிருத்தி, அடிப்படை வசதிகள், அழகுபடுத்தல், பாரம்பரியத்தை பாதுகாக்கும் திட்டங்கள் என பல்வேறு முக்கிய முயற்சிகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.

 

முக்கியமாக,

 

• காத்தான்குடியின் தனித்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் திட்டங்கள்

 

• சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள்

 

• கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மீகத்தை ஒருங்கிணைக்கும் சுற்றுலா தளங்கள்.

 

• இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சுற்றுலா சார்ந்த முயற்சிகள்

 

என பல திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு  வருகின்றன.

 

எதிர்காலத்தில், காத்தான்குடி

ஆன்மீக நகரம் மட்டுமல்லலாது

சுற்றுலா வரைபடத்தில் பிரகாசிக்கும் பெயராக

இலங்கையின் பெருமையாக

மாறப்போகிறது.

 

ஹிஸ்புல்லாஹ்வின்  தொலைநோக்கு, அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாக பதிவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *