கூட்டுறவு பிரதியமைச்சர் பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம்!

கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க இன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 

பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய பணிப்பாளர் சபை உறுப்பினர்களோடும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

 

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன்,அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *