கலைத்துறையில் தடம் பதிக்கும் நோக்குடன், யுக்தா புரொடக்ஷன் (Yuktha Production) நிறுவனத்தின் புதிய படைப்பான ‘பத்தும் தீயும் பகையும்’ திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல Valampuri Hotel-இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஈழத்துக் கலைப் படைப்புகளை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக உருவாகும் இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் பிரகாஸ் ராஜா இயக்குகிறார். படத்திற்கு பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தை யுக்தா புரொடக்ஷன் சார்பாக கஜன் கந்தசாமி பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ‘அகாசியா’ (Acacia) உள்ளிட்ட பல கலைப் படைப்புகளில் தடம் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், படக்குழுவினர், ஊடகவியலாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். விழாவின் போது படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தயாரிப்பாளர் கஜன் கந்தசாமி பேசுகையில்:
“தரமான படைப்புகளை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்த வகையில் ‘பத்தும் தீயும் பகையும்’ திரைப்படம் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்,” எனத் தெரிவித்தார்.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுவீச்சில் நடைபெறவுள்ளது. ஈழத்துத் திரையுலகிற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என சினிமா விமர்சகர்களினால் எதிர்பார்க்கப்படுகிறது.

