திருமலை துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு கப்பல்!

நேற்று (23) திருகோணமலை அஷ்ரொப் துறைமுகத்தில் 555 சுற்றுலாப் பயணிகளுடன் “M.V. Crystal Symphony” கப்பல் தரையிறங்கியுள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா – ஆகியவற்றில் இருந்து வந்த பயணிகள், திருகோணமலை, சீகிரியா, ஹபரணை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களில் ஒரு நாள் சுற்றுப்பயணத்தை அனுபவிப்பார்கள்.
பஹாமாஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பலில் 497 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வருகை, கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரும் உற்சாகம் மற்றும் வளர்ச்சிக் வாய்ப்பாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் திருகோணமலை, இயற்கை அழகு, வரலாற்று சின்னங்கள் மற்றும் கடற்கரை வளங்கள் காரணமாக சர்வதேச பயணிகளின் விருப்பப் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த வருகை, உள்ளூர் ஹோட்டல்கள், போக்குவரத்து சேவைகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் ஆதரவாக அமையும் என சுற்றுலாத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *