எம்மில் பலரும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் சிறிதளவேனும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புபவர்.
பொருளாதார நெருக்கடி – விலைவாசி உயர்வு – வாய்ப்புகள் குறைவு – கடன் – என பல சுமைகள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் ஒரு சவரன் தங்க நகையாவது வாங்கி சேமிப்பில் இருந்திட வேண்டும் என திட்டமிட்டு உழைப்பர்.
ஆனால் இது சிலருக்கு சாத்தியமாகும். பலருக்கு பகல் கனவாக எட்டா கனியாகவே இருக்கும். இதுபோன்ற நிலையில் உள்ளவர்களுக்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான குறிப்பினை வழங்கி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் காலையில் எழுந்து நீராடி இறைவனை தொழுது அலுவலகத்திற்குச் சென்று பணிகளை செய்து வீடு திரும்பும் வரை சந்தனத்தை எப்போதும் உடன் வைத்திருங்கள். சந்தனத்தை திலகமாக நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.
சந்தன வாசனை திரவியத்தை பூசிக் கொள்ளலாம். சந்தன எண்ணெய்யை பாவிக்கலாம். திங்கட்கிழமைகளில் நீங்கள் ஆலயத்திற்கு சென்றால் இறைவனுக்கு அபிஷேகப் பொருளாக வாசனை மிக்க சந்தனத்தை வழங்கலாம்.
திங்கட்கிழமைகளில் நீங்கள் சந்தனத்தை பாவிக்கும்போது மனம் அமைதி அடைந்து உங்களுடைய உள்ளுணர்வும் உள்ளாற்றலும் புத்தாக்கம் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான சூட்சம ரகசியத்தை உங்களுடைய அறிவார்ந்த நிலையில் தூண்டும். அன்று முழுவதும் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
இதனை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நீங்கள் தொடர்ச்சியாக பாவிக்கும்போது எதிர்பார்த்த முன்னேற்றம் வரும் ஆண்டுகளில் சாத்தியமாவதை அனுபவத்தில் காணலாம்.

