இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘TVK’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் ‘சிட்டு’ (Sittu) என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு திருநங்கை (Transgender) கதாபாத்திரத்தில் ஜனா ஆர்.ஜே (Jana RJ) நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வெளியாகியுள்ள போஸ்டரில், கலைந்த தலைமுடி, காயம்பட்ட முகம் மற்றும் கண்களில் கண்ணீருடன் ஜனா ஆர்.ஜே காட்சியளிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ஜனா ஆர்.ஜே-வின் இந்தத் துணிச்சலான முடிவு, திரையுலகினரிடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
பின்னணியில் போராட்டக் களத்தைப் போன்ற நெருப்பு மற்றும் மக்களின் எழுச்சி தெரிவது, இது ஒரு அழுத்தமான அரசியல் அல்லது சமூகப் போராட்டக் கதையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
ஒவ்வொரு கத்திக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், படத்தில் சிட்டு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் இருக்கும் வலிகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் போராட்டங்களையும் ஆக்ஷன் மற்றும் எமோஷன் கலந்து இந்தப் படம் பேசும் என சினிமா விமர்சகர்களால் எதிர்பார்க்க.ப்படுகிறது.

தொழில்நுட்பக் கூட்டணி:
இயக்கம்: பிரவீன் கிருஷ்ணராஜா
இசை: சகிஷ்ணா சேவியர்
ஒளிப்பதிவு: கதிர் ராஜசேகரம்
தயாரிப்பு: சிலோன் மெட்டல் இண்டஸ்ட்ரி (Ceylon Metal Industry)
விரைவில் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

